இடுகைகள்

அக்டோபர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கடந்த 10 வருடத்தில் தங்கத்தில் முதலீடு VS வங்கி தொடர்வைப்பில் முதலீடு... எது சிறந்தது ? Investing over the last 10 years in GOLD VS BANK RD... which is better?

படம்
2000 ம் ஆண்டிலிருந்து (10 வருடங்களுக்கு) நீங்கள் மாதம் ரூ.5000 தொடர் வைப்புத்தொகையில் முதலீடு செய்திருந்தால் அதன் இன்றைய மதிப்பை காண்போம். உங்களுடைய மொத்த முதலீட்டு தொகை ரூ.600000 (தற்போது வங்கிகளில் வட்டி விகிதம் 8% தான் என்றாலும் சில ஆண்டுகளுக்கு முன்பு 9%, அதற்கும் முன்பு 10% அதற்கும் முன்பு 12% எல்லாம் இருந்திருக்கிறது) நாம் சராசரியாக 10% வைத்துக்கொள்வோம். உங்களுக்கு கிடைக்ககூடிய வட்டி தொகை மட்டும் ரூ.432760. ஆக, உங்களுக்கு கிடைக்க கூடிய மொத்த தொகை ரூ.1032760 மட்டுமே. 2000 ம் ஆண்டிலிருந்து (10 வருடங்களுக்கு) நீங்கள் மாதம் ரூ.5000 தங்கத்தில் முதலீடு செய்திருந்தால் அதன் இன்றைய மதிப்பை காண்போம். சரியாக சொல்ல வேண்டுமென்றால் சதுரங்கவேட்டை படத்தில் வரக்கூடிய வசனமே நியாபகத்திற்கு வருகிறது. " சக்கரவர்த்தியா வாழலாம்" . உங்களுடைய மொத்த முதலீட்டு தொகை ரூ.600000 இன்று உங்களிடம் இருக்க கூடிய மொத்த தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ.5793442 இன்று உங்களிடம் இருக்க கூடிய மொத்த தங்கத்தின் எடை : 1136 கிராம் அந்த மதிப்பை மீண்டும் ஒரு முறை நன்றாக பார்த்துக்கொள்ளும்படி உங்களை கேட்டுக்கொள்கிறேன். சர...

PVC ஆதார் அட்டை

படம்
பி.வி.சி ஆதார் அட்டை : ஆதார் பி.வி.சி அட்டை என்பது யுஐடிஏஐ அறிமுகப்படுத்திய ஆதாரின் சமீபத்திய வடிவம் ஆகும். இது எடுத்து செல்வதற்கு மிகவும் எளிதானதாக இருக்க கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது நீண்ட நாள் பயன்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.  பாதுகாப்பு அம்சங்கள் : பி.வி.சி-அடிப்படையிலான ஆதார் அட்டை டிஜிட்டல் முறையில் கையொப்பமிடப்பட்ட பாதுகாப்பான QR குறியீடு, புகைப்படம் மற்றும் புள்ளிவிவர விவரங்களுடன் பல பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.  இந்த அட்டையில் இது போன்ற பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன: * பாதுகாப்பான QR குறியீடு * ஹாலோகிராம் * மைக்ரோ உரை * புகைப்படம் * வெளியீட்டு தேதி & அச்சு தேதி * கில்லோசே பேட்டர்ன் * புடைப்பு ஆதார் லோகோ பி.வி.சி ஆதார் அட்டை பெறும் வழிமுறை : ஆன்லைனில் uidai.gov.in அல்லது Resident.uidai.gov.in மூலம் ஆதார் எண், மெய்நிகர் ஐடி அல்லது பதிவு ஐடியைப் பயன்படுத்தி ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம் மற்றும் ரூ. 50 / -. ஆதார் பி.வி.சி கார்டு வேகமான தபால் மூலம் குடியிருப்பாளரின் முகவரிக்கு வழங்கப்படுகிறது. சிறப்பம்சம் : இந்த ஆதார் அட...

சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரர் ஆலயங்கள்

படம்
  தமிழ்நாட்டில் உள்ள சில கோவில்களை இங்கே குறிப்பிடுகிறேன் முடிந்தால் சென்று வழிபட்டு வாருங்கள். * திருநள்ளாறு (காரைக்கால்) காரைக்கால் அருகே உள்ளது திருநள்ளாறு. நள மகா சக்கரவர்த்தியின் ஏழரை நாட்டு சனி விலகிய தலம் இது. இங்குள்ள நள தீர்த்தம் விசேஷம் மிக்கது. இந்த குளத்தில் நீராடி, தர்ப்பாரண்யேஸ்வரரையும், சனி பகவானையும் வழிபாடு செய்தால், சனி தோஷங்கள் விலகும். * குச்சனூர் (உத்தமபாளையம்) தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ளது குச்சனூர். இங்கு சனி பகவான் சுயம்பு மூர்த்தியாய் அருள்கிறார். கல் தூணாக பூமியில் இருந்து தோன்றிய மூர்த்தம் இது. இந்த இறைவனுக்கு மஞ்சள் காப்பு சாத்துகிறார்கள். சூரியனின் மகன் என்பதால் நாமமும், ஈஸ்வர பட்டம் பெற்றிருப்பதால் விபூதியும் அணிவிக்கிறார்கள். * எட்டியத்தளி (அறந்தாங்கி) புதுக்கோட்டை, அறந்தாங்கியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது எட்டியத்தளி. அகத்திய மாமுனிவர் காசி விஸ்வநாதரை வணங்கி விட்டு, இந்த திருத்தலத்திற்கு வருகை தந்தார். அப்போது அஷ்டம சனியால் பாதிக்கப்பட்டிருந்த தொண்டை மண்டல மன்னன் காளிங்கராயன், தன்னுடைய சனி தோஷம் நீங்குவதற்காக திருநள்ளாறு திரு...