கடந்த 10 வருடத்தில் தங்கத்தில் முதலீடு VS வங்கி தொடர்வைப்பில் முதலீடு... எது சிறந்தது ? Investing over the last 10 years in GOLD VS BANK RD... which is better?

2000 ம் ஆண்டிலிருந்து (10 வருடங்களுக்கு) நீங்கள் மாதம் ரூ.5000 தொடர் வைப்புத்தொகையில் முதலீடு செய்திருந்தால் அதன் இன்றைய மதிப்பை காண்போம்.


உங்களுடைய மொத்த முதலீட்டு தொகை ரூ.600000

(தற்போது வங்கிகளில் வட்டி விகிதம் 8% தான் என்றாலும் சில ஆண்டுகளுக்கு முன்பு 9%, அதற்கும் முன்பு 10% அதற்கும் முன்பு 12% எல்லாம் இருந்திருக்கிறது)

நாம் சராசரியாக 10% வைத்துக்கொள்வோம்.

உங்களுக்கு கிடைக்ககூடிய வட்டி தொகை மட்டும் ரூ.432760.

ஆக, உங்களுக்கு கிடைக்க கூடிய மொத்த தொகை ரூ.1032760 மட்டுமே.


2000 ம் ஆண்டிலிருந்து (10 வருடங்களுக்கு) நீங்கள் மாதம் ரூ.5000 தங்கத்தில் முதலீடு செய்திருந்தால் அதன் இன்றைய மதிப்பை காண்போம்.

சரியாக சொல்ல வேண்டுமென்றால் சதுரங்கவேட்டை படத்தில் வரக்கூடிய வசனமே நியாபகத்திற்கு வருகிறது. "சக்கரவர்த்தியா வாழலாம்".

உங்களுடைய மொத்த முதலீட்டு தொகை ரூ.600000

இன்று உங்களிடம் இருக்க கூடிய மொத்த தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ.5793442

இன்று உங்களிடம் இருக்க கூடிய மொத்த தங்கத்தின் எடை : 1136 கிராம்

அந்த மதிப்பை மீண்டும் ஒரு முறை நன்றாக பார்த்துக்கொள்ளும்படி உங்களை கேட்டுக்கொள்கிறேன்.

சரி வாருங்கள் விரிவாக பாப்போம்.

அட்டவணையில் தோராயமாக 1 கிராம் தங்கத்தின் விலை


முதல் வருட முடிவில் மட்டும் உங்களிடம் இருக்க கூடிய மொத்த தங்கத்தின் எடை 136.36 கிராம்.

செய்கூலி மற்றும் சேதாரம் :

தங்கத்தின் மீதான செய்கூலி மற்றும் சேதாரம் 5 முதல் 30 சதவிகிதம் வரை வசூலிக்கப்படுகிறது. நாம் 20 சதவிகிதம் என வைத்துக்கொள்வோம்.

அதில் நமக்கு கிட்டத்தட்ட 227 கிராம் தங்கம் நட்டமாகிறது. எனினும் நமக்கு இறுதியாக கிடைக்க கூடிய மொத்த தங்கத்தின் மதிப்பானது சுமார் 909 கிராம்.

கிடைக்ககூடிய தொகை :

தங்கத்தில் முதலீடு செய்திருந்தால், தொடர் வைப்பை விட நமக்கு (செய்கூலி மற்றும் சேதாரம் போக) சுமார் ரூ.3601994 அதிகமாகவே கிடைத்திருக்கும்.


(குறிப்பு : இது கடந்த கால தகவல்களை அடிப்படையாக வைத்தே உங்களுக்கு விளக்கப்பட்டுள்ளது.)


கருத்துகள்